Tag Archives: மஹிந்த

June 1, 2015

தேசிய சேமிப்பு வங்கியில் மஹிந்த அரசினால் பெறப்பட்ட 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது?: ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தேசிய சேமிப்பு வங்கியிலிருந்து பெருந்தெருக்கள் அமைச்சுக்காக பெறப்பட்ட 5500 கோடி ரூபாவில் 2100 கோடி ரூபாவே செலவிடப்பட்டுள்ளது. மீதமுள்ள 2800 கோடி ரூபாவுக்கு என்ன நடந்தது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க கேள்வியெழுப்பியுள்ளார். 

May 31, 2015

ரணிலின் குற்றச்சாட்டை மஹிந்த மறுத்துள்ளார்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பெருந்தெருக்கள் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார். இந்தக் காலத்தில் வீதி அபிவிருத்திக்கென்று வங்கி ஒன்றில் இருந்து பெற்ற 55 பில்லியன் ரூபாவில் 28 பில்லியன் ரூபாவை வேறு ஒரு அமைச்சுக்கு மாற்றியதாக ரணில் விக்கிரமசிங்க குற்றம் சுமத்தியிருந்தார்.

May 30, 2015

ஐ.ம.சு.கூ. உடைகிறது; மஹிந்த மூன்றாவது அணியில் போட்டி!

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பிரதமர் வேட்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ள நிலையில், ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உடையும் நிலை உருவாகியுள்ளது.  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும்

May 28, 2015

மஹிந்த அரசில் நியமிக்கப்பட்ட தூதுவர்கள் அனைவரும் நீக்கம்! புதியவர்கள் நியமனம் விரைவில்..

புதிய அரசாங்கத்தினால் இந்தியாவிற்கான புதிய உயர்ஸ்தானிகரொருவர் சிபாரிசு செய்யப்பட்டுள்ள போதும் பதவியேற்கும் வரையில் இந்திய உயர்ஸ்தானிகர் பதவியிலிருப்பாரென்றும் அவர் கூறினார். வெளிவிவகார அமைச்சின் உத்தியோகபூர்வ பேச்சாளராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள மஹீஷினி கொலன்ன நேற்று தனது முதலாவது ஊடகவியலாளர் சந்திப்பினை நடத்திய போதே மேற்கண்டவாறு

May 27, 2015

மஹிந்த ராஜபக்ஷவுக்கு மனநோய்: மனோ கணேசன்

இருப்பதை இல்லை என்றும் இல்லாததை இருகின்றது என்று சொல்லும் ஒரு மனநோயால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவதிப்படுகிறார். அவருக்கு உடனடியாக மனோ வைத்தியம் தேவைப்படுகிறது என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.  அதிகாரத்தை பகிர்ந்து

May 26, 2015

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக மஹிந்த வங்குரோத்து அரசியல் செய்கின்றார்: ரணில் விக்ரமசிங்க

அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ எந்த நிலைக்கும் கீழ் இறங்கத் தயாராக இருப்பதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.  அதிகாரத்தைக் கைப்பற்ற எதனையும் விற்பனை செய்ய மஹிந்த ராஜபக்ஷ தயாராக இருக்கிறார். ராஜபக்ஷ ஆட்சியின் மீள்புரட்சியை தோற்கடிக்க

May 24, 2015

மஹிந்த ஆதரவு ஆயுதக் குழுக்கள் வித்தியா படுகொலை விசாரணைக்கு இடையூறு: த.தே.கூ பிரதமரிடம் எடுத்துரைப்பு!

புங்குடுதீவு மாணவி வித்தியா படுகொலை விசாரணைகளை நீதியாக முன்னெடுப்பதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆதரவு ஆயுதக்குழுக்கள் இடையூறு விளைவிக்கின்றன என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துரைத்துள்ளது.  யாழ்ப்பாணம் தீவகத்தினை முன்னர் தமது கட்டுப்பாட்டில் வைத்திருந்த

May 23, 2015

மஹிந்த ஆட்சியில் 2700 பில்லியன் ரூபாய் மத்திய வங்கியில் மோசடி: ரணில் விக்ரமசிங்க

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் ஆட்சிக்காலத்தில் மத்திய வங்கியில் 2700 பில்லியன் ரூபாய் மோசடி இடம்பெற்றுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க குற்றஞ்சாட்டியுள்ளார்.  ராஜபக்ஷவின் காலத்தில் இடம்பெற்ற இந்த பாரிய மோசடியை எதிர்க்கட்சியினர் மூடி மறைக்க பார்க்கின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

May 22, 2015

இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னணியில் அமெரிக்காவும் பிரித்தானியாவும்! மஹிந்த குற்றச்சாட்டு

தமது அரசாங்கம் மீது இந்த நாடுகள் மனித உரிமைமீறல் குற்றச்சாட்டுக்களை சுமத்தின. எனினும் இன்றைய அரசாங்கம் கண்மூடித்தனமாக மனித உரிமைகளை மீறுகிறது என்று மஹிந்த குறிப்பிட்டார். அமெரிக்காவுக்கும் பிரித்தானியாவுக்கும் தம்மை ஒதுக்கி வைக்க வேண்டிய தேவையிருந்தது. தற்போது அவர்களுக்கு சந்தோசம் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.

May 22, 2015

மஹிந்த போல் இனவாதம் பேசாதீர்கள்; விஜயதாஸ ராஜபக்ஷ ஊடகவியலாளருக்கு அறிவுறுத்தல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ போன்று இனவாதம் கலந்த சொற்களை பாவிப்பதை தவிர்க்குமாறு ஊடகவியலாளர் ஒருவரை நீதியமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ அறிவுறுத்தியுள்ளார்.  கொழும்பில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. “வடக்கில் உள்ளவர்கள் பிரபாகரனுடைய