Tag Archives: வடக்கு

August 10, 2016

முன்னாள் போராளிகளுக்கு சர்வதேச வைத்தியப் பரிசோதனை அவசியம்; வடக்கு மாகாண சபை தீர்மானம்!

வடக்கு மாகாண சபையின் 58வது அமர்வு நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பமானது. அதிலேயே மேற்கண்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.  முன்னாள் போராளிகள் 107 பேர் உயிரிழந்துள்ளமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகள் மற்றும் உயிரிழந்துள்ளவர்களில் அநேகர் புற்றுநோயினால் உயிரிழந்துள்ளமை உள்ளிட்ட விடயங்கள் கடந்த நாட்களில் கவனம் பெற்றிருந்தது.

August 10, 2016

ஐ.நா ஆவணத்தில் சந்தேகம் கொண்டுள்ள வடக்கு முதல்வர்!

ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட பிரதிநிதி சமாதானத்தை கட்டியெழுப்புவதற்காக எங்களின் கருத்துக்களை அறியும் ஆவணம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் போர்குற்றம் தொடர்பான விடயங்கள் எவையும் இடம்பெறவில்லை என கூறிப்பிட்டுள்ள, வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், அது தமக்கு

August 9, 2016

வடக்கு- கிழக்கு இணைப்பு வேண்டாம்; சமஷ்டி முஸ்லிம்களுக்கு பாதிப்பானது: முஸ்லிம் சிவில் அமைப்புகள் ஒன்றியம்

அத்தோடு, சமஷ்டி அதிகாரப் பரவலாக்க முறைமை முஸ்லிம் மக்களுக்கு பாதிப்பானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ் மக்கள் பேரவை வடக்கு – கிழக்கு மாகாணங்கள் இணைந்த சமஷ்டி முறையிலான அதிகாரப் பகிர்வை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றி 24 மணி நேரத்திற்குள் கிழக்கு முஸ்லிம் சிவில்

August 8, 2016

வடக்கு மாகாண அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்களை விசாரிக்க குழு அமைப்பு!

வடக்கு மாகாண அமைச்சர்கள் சிலர் தொடர்பில் ஆதாரங்களுடனான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், ஆனாலும், அது தொடர்பில் இன்னமும் நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்று வடக்க மாகாண சபையின் உறுப்பினர்கள் சிலர் தொடர்ச்சியான தெரிவித்து வருகின்றனர்.  இந்த நிலையிலேயே முதலமைச்சர், குற்றச்சாட்டுக்களை விசாரிப்பதற்கு விசாரணைக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். 

August 8, 2016

வடக்கு- கிழக்கு இணைப்பு அவசியம்; முஸ்லிம்களுக்கு தனியான நிர்வாக அலகு: சி.வி.விக்னேஸ்வரன்

அத்தோடு, வடக்கு- கிழக்கிலுள்ள முஸ்லிம் மக்களுக்கு ஒரு நிர்வாக அதிகார சபையை வழங்குவதில் தமிழ் மக்களுக்கு எந்த ஆட்சேபணையும் இருக்க முடியாது. ஆனால், வடக்குக் கிழக்கு இணைந்த தமிழ்ப் பேசும் அலகு என்பது எமது வருங்கால ஒற்றுமைக்கும், தமிழ்ப் பாரம்பரிய நிரந்தரத்திற்கும் மிக்க அவசியமான

August 7, 2016

முன்னாள் போராளிகளின் உடல்நிலை தொடர்பில் வடக்கு மாகாண சபை ஆராயவுள்ளது: சி.வி.விக்னேஸ்வரன்

யாழ்ப்பாணத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற தமிழ் மக்கள் பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். முன்னாள் போராளிகளுக்கு மெல்லக் கொல்லும் விச ஊசிகள் ஏற்றப்பட்டுள்ளதாகவும், அதனால், பலர் உயிரிழந்துள்ளதாகவும் தொடர்ச்சியாக தெரிவிக்கப்பட்டு வருகின்றது. இந்த

August 7, 2016

சிங்களமாக மாறிவரும் வடக்கு: இன அழிப்பை தடுக்க வடக்கும் கிழக்கும் இணைய வேண்டும் – சீ.வி.விக்னேஸ்வரன்

பொறுப்புக்கூறல், வடகிழக்கு இணைப்பு, மற்றும் அரசியல் தீர்வு உள்ளிட்ட மூன்று விடயங்களையும் சர்வதேச மட்டத்தில் வலியுறுத்த வேண்டுமென தமிழ் மக்கள் பேரவையிடம் வடமாகாண முதலமைச்சரும் தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவருமான சீ.வி.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ் மக்கள்

August 1, 2016

மாற்றுத் திறனாளிகள் இசைத்துறையில் விற்பன்னர்களாக விளங்குவது ஆச்சரியம்! வடக்கு முதல்வர்

“Great to be unique”எனும் தொனிப் பொருளில் மாற்றுத்திறனாளிப் பெண் சாரணியர் பாசறையினரால் நடாத்தப்படும் இசை நடன மாலை நிகழ்வுகளில் கலந்து கொண்டு உங்கள் முன் உரையாற்றுவதில் மிக்க மகிழ்ச்சி அடைகின்றேன். நீங்கள் இலகுவில் விளங்கிக் கொள்ளக் கூடிய உங்களது சைகை மொழியில் நேரடியாக

July 29, 2016

மொரகஹாகந்த திட்டத்தில் எமது பங்களிப்பையும் பெற வேண்டும்; வடக்கு மாகாண சபை வலியுறுத்தல்!

வடக்கு மாகாணத்திற்கும், வடமத்திய மாகாணத்திற்கும் நீரினைப் பங்கீடு செய்யும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ள மகாவலி திட்டத்தின் மொரகஹாகந்த திட்டத்தில் வடக்கு மாகாண சபையின் பங்களிப்பு உள்ளடக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 

July 28, 2016

சிங்கள மக்களின் குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட மக்களிடம் அறிக்கை கோரும் வடக்கு முதல்வர்!

சிங்கள குடியேற்றத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டம் சார்ந்த மக்கள் தங்களுடைய பாதிப்பு தொடர்பான அறிக்கையினை எமக்கு சமர்பித்தால் அதனை பொறுப்பு வாய்ந்தவர்களின் கவனத்திற்கு கொண்டுவருவதன் ஊடாக நடவடிக்கை எடுக்ககோருவதற்கும், நடவடிக்கை எடுப்பதற்கான அழுத்தங்களை கொடுப்பதற்கும் நாம் தயாராக இருப்பதாக வடமாகாண முதலமைச்சர் க.வி. விக்கினேஸ்வரன்