Tag Archives: விசாரணை

July 29, 2016

லசந்த படுகொலை வழக்கு; முன்னாள் பொலிஸ் மா அதிபரிடமும் விசாரணை!

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு விசாரணைகளின் ஒருகட்டமாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர்.  லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டிருந்த காலப்பகுதியில் பொலிஸ் மா அதிபராக மஹிந்த

July 26, 2016

சோபித தேரரின் மரணம் தொடர்பில் அவரது வைத்தியர்களிடம் விசாரணை

மாதுலுவாவே சோபித்த தேரரின் மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைநடவடிக்கைகளின் பொருட்டு அவருக்கு சிகிச்சையளித்த வைத்தியசாலைவைத்தியர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் விசேட குழுவினருக்கு கொழும்புபிரதான நீதவான் கிஹான் பிலப்பிட்டியவினால் இந்த உத்தரவுபிறப்பிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இந்த குழுவின் தலைவரும்,கொழும்பு

July 20, 2016

பல்கலைக்கழக மாணவர்களின் ஆதங்கங்களை அறிய பூரண விசாரணை வேண்டும்: வடக்கு மாகாண சபை

யாழ். பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண சபை, குறித்த சம்பவம் தொடர்பில் பூரண விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது.  அத்தோடு, மாணவர்களின் ஆதங்கள் பற்றி அறிந்து கொள்வதற்கான நடவடிக்கைகளையும், விசாரணைகளையும்

July 17, 2016

லசந்த விக்ரமதுங்க படுகொலை விசாரணை: இராணுவ வீரருக்கு விளக்கமறியல்!

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலையோடு சம்பந்தப்பட்டதாக குற்றஞ்சாட்டப்பட்டு நேற்று சனிக்கிழமை பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட இராணுவப் புலனாய்வுப் பிரிவைச் சேர்ந்த வீரர் ஒருவரை, தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு கல்கிசை நீதவான் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

July 7, 2016

இராணுவத்தை தண்டிக்கவல்ல; ஆணை பிறப்பித்தோரை கண்டறியவே உள்ளக விசாரணை: மங்கள சமரவீர

இலங்கை இராணுவத்தை தண்டிப்பதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையிடம் வாக்குறுதிகள் எதனையும் தாம் வழங்கவில்லை என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.  “எமது இலக்கு இராணுவத்தை தண்டிப்பது அல்ல. மாறாக இராணுவத்தினருக்கு தவறான உத்தரவு பிறப்பித்தவர்களை கண்டறிந்து

July 6, 2016

இராணுவம் கொத்துக் குண்டுகளை பாவித்தமை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணை அவசியம்: சிவசக்தி ஆனந்தன்

இறுதி மோதல்களின் போது இராணுவம் கொத்துக் குண்டுகளைப் பாவித்தமை தொடர்பில் நீதியான பக்கச்சார்பற்ற விசாரணை அவசியமானது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார்.  இறுதி மோதல்களின் போது கொத்துக் குண்டுகள் பாவிக்கப்பட்டுள்ளன என்பதை உறுதிப்படுத்தும்

June 29, 2016

சுவாதி கொலை வழக்கில் விசாரணை தீவிரம்!

சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கொலை செய்யப்பட்ட சுவாதியின் வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ளது.  கடந்த வெள்ளிக்கிழமை சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற மென்பொறியாளர், மர்ம நபர் ஒருவரால் படுகொலை செய்யப்பட்டார்.  இவரைக் கொலை செய்தது யார், எதற்காக கொலை

June 28, 2016

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்திரா வாகிஸ்டவிடம் மூன்று மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் கைது செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி கைதிகளின் தங்க ஆபரணங்கள் மற்றும் பெறுமதியான பொருட்கள் காணாமல்

June 28, 2016

சுவாதி கொலை வழக்கு விசாரணை: சென்னை காவல் துறைக்கு மாற்றம்

பெண் பொறியாளர் சுவாதி கொலை வழக்கின் விசாரணை எழும்பூர் ரயில்வே போலீஸாரிடமிருந்து சென்னை பெருநகரக் காவல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளது. சென்னை சூளைமேட்டைச் சேர்ந்த சந்தானகிருஷ்ணன் மகள் சுவாதி, பரனூரில் உள்ள இன்போஸிஸ் நிறுவனத்தில் பணிபுரிந்துவந்தார். இவர் கடந்த 24ஆம் தேதி வேலைக்குச் செல்ல ரயிலுக்காக

June 25, 2016

பிணைமுறி மோசடிகள் விசாரணை முடியும் வரை பதவி நீடிப்பை கோரப் போவதில்லை: அர்ஜுன மகேந்திரன்

பிணைமுறி மோசடிகள் தொடர்பிலான கோப் குழு விசாரணைகள் பூர்த்தியாகும் வரையில் பதவி நீடிப்பை தான் கோரப் போவதில்லை என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மகேந்திரன் தெரிவித்துள்ளார்.  நேற்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்தில், கலந்துகொண்டபோதே மத்திய வங்கி